0

Internet Error Codes பற்றி அறிந்துகொள்வோம்.(Error 404......etc) 


Internet Error Codes

Browserல் இடையிடையே சில இணையப்பக்கங்கள் திறந்துகொள்வதில் சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அதன்போது சிலவகையான ''Error Codes'' தோன்றும். அவை என்னென்ன காரணத்தால் தோன்றுகின்றன. என அறிந்து கொண்டால் அவற்றை சரிசெய்யலாமல்லவா.



Error 400 - தவறான கோரிக்கை. அதாவது நீங்கள் AdressBAR ல் தட்டச்சிட்ட URL name தவறாக இருப்பதால்(spelling mistake) இந்த Error Code தோன்றும்.


Error 401 - இது உங்களுக்கு உரித்துடையதல்லாத கணக்கினுள் நுழைய முற்படும்போது தோன்றும். அதாவது நீங்கள் உங்கள் இணைய கணக்கினுள் நுழைய தட்டச்சிட்ட username and password என்பவற்றில் ஏதாவது தவறிருந்தால் இந்த Error Code தோன்றும்.

Error 403 - இந்த Error Code நீங்கள் முடக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட பக்கமொன்றையோ அல்லது காலாவதியான (domain) தளமொன்றினை பார்க்க முற்படும்போதோ தோன்றும்.

Error 404 
- இது பலருக்கும் பழக்கப்பட்ட ஒரு Error Code. வலை உலவலில் அடிக்கடி இந்த Error Code தோன்றி உங்களை எரிச்சலூட்டியிருக்கும். இது நீங்கள் திறப்பதற்கு முயற்சிக்கும் பக்கம் வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது அந்த பக்கம் மறுபெயராக்கம்(re-named) செய்யப்பட்டிருந்தாலோ தோன்றும். சிலவேளைகளில் URL தவறாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

Error 408 - உங்களின் கோரிக்கை உரிய நேரத்தில் நீங்கள் திறக்க விரும்பிய பக்கங்களின் சேவை வழங்கிகளான சேர்வர்களை சென்றடையாத போது இந்த Error Code தோன்றும்.

மேலும் சில Error Codes......


  • 404.0 - Not found.
  • 404.1 - Site Not Found.
  • 404.2 - ISAPI or CGI restriction.
  • 404.3 - MIME type restriction.
  • 404.4 - No handler configured.
  • 404.5 - Denied by request filtering configuration.
  • 404.6 - Verb denied.
  • 404.7 - File extension denied.
  • 404.8 - Hidden namespace.
  • 404.9 - File attribute hidden.
  • 404.10 - Request header too long.
  • 404.11 - Request contains double escape sequence.
  • 404.12 - Request contains high-bit characters.
  • 404.13 - Content length too large.
  • 404.14 - Request URL too long.
  • 404.15 - Query string too long.
  • 404.16 - DAV request sent to the static file handler.
  • 404.17 - Dynamic content mapped to the static file handler via a wildcard MIME mapping.
  • 404.18 - Query string sequence denied.
  • 404.19 - Denied by filtering rule.
  • 404.20 - Too Many URL Segments.
 

பொதுவாகServer களில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் காரணமாகவே இந்தவகை Error Codes தோன்றுகின்றன.

Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top