ANDROID PHONEகளில் PATTERN LOCK மறந்துவிட்டால் UNLOCK செய்வது எப்படி?
நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
Samsung Android Phoneகளின் Pattern Lock மறந்துவிட்டால் அதை Reset செய்ய 3 வழிகள் உள்ளது
(1)
- நீங்கள் உங்கள் Phoneல் உபயோகிக்கும் Gmail id மற்றும் Password ஐ உள்ளிட்டு Signin செய்தால் போதும்.
- ஆனால் இதற்கு Mobile data வை Power Button ஐ அழுத்தி பிடித்து Enable செய்ய வேண்டும்.
(2)
- நீங்கள் Pattern Create செய்யும் போது உள்ளிட்ட Backup Pin Number ஐ உள்ளிட்டு Pattern ஐ Reset செய்யலாம்.
- மேற்க்கண்ட இரண்டு முறைகளும் பயனளிக்காதபோது மூன்றாவதாக ஒரு முறை உள்ளது.
(3)
- இதன் மூலம் Password ஐ Reset செய்வதால் Phone Memoryல் உள்ள எல்லா Dataவும் அழிக்கப்பட்டுவிடும்.
- முதலில் Phone ஐ Switch off செய்யவும்.
- Volume UP button, Power button, Home button மூன்றையும் ஒரே நேரத்தில் அழுத்தி பிடிக்கவும்.
- திரையில் உங்கள் Phone Model தெரிந்தவுடன் மூன்று Buttonகளையும் விட்டு விடவும்
- இப்போது சிறிது loading ஆன பிறகு தோன்றும் திரையில் இருக்கும் WIPE DATA/FACTORY RESET என்பதை Select செய்யவும்.
- இங்கு மேலே கீழே நகர Volume button ஐ பயன்படுத்தவும். Select செய்ய Power button ஐ அழுத்தவும்.
- அடுத்து தோன்றும் Windowகளில் YES என்பதை Select செய்யவும்.
- அடுத்து Phone Reboot ஆகும் அல்லது Reboot செய்யவும்.
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.