tech tamil tips பென் ட்றைவின் (Pen Drive) வேகத்தை அதிகரிக்க இலகு வழி
உங்கள் பென் ட்றைவ் மிகவும் Slow ஆக இயங்குகிறதா? பெரிய கொள்ளளவுடைய Data களை பரிமாற்றம் செய்யும்போது அதிக நேரம் எடுக்கிறதா? கவலையை விடுங்கள். மிக இலகுவாக இந்த பிரச்சினையை சரி செய்து விடலாம்.
முதலில் பென் ட்றைவை கணினியில் இணையுங்கள். அதன் பின்னர் My Computer செல்லுங்கள் (Ctrl+E)
அடுத்து வரும் விண்டோவில் Hardware Tab ஐ கிளிக் செய்யுங்கள். பின்னர் Name என்பதற்கு கீழ் உங்கள் பென் ட்றைவ் இனை தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்ததும் கீழ் உள்ள Properties என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து வரும் விண்டோவில் Change Setting என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து வரும் விண்டோவில் Policies என்னும் Tab ஐ கிளிக் செய்யுங்கள். அதன் பின்னர் வரும் விண்டோவில் “Better performance” என்னும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவும் தான். இப்போது உங்கள் பென் ட்றைவ் முன்னரை காட்டிலும் வேகமாக இயங்கும்.
குறிப்பு : பென் ட்றைவை கணினியில் இருந்து அகற்றும்போது “Safely remove hardware” என்பதை கொடுத்து அகற்றுங்கள்.
நன்றி .
ReplyDeleteGreat post Dear………keep posting!!!
Personalized pens online
Thanks Friend
Delete