14

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா..? என்பதை அறிந்து கொள்ள


மின்னஞ்சலானது தற்கால தகவல் பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது. எனினும் சில வேளைகளில் அசௌகரியங்கள் ஏற்படவே செய்கின்றன.

அவ்வாறானதொன்றே நாம் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டதா ?இல்லையா ? என்ற சந்தேகமாகும். அதனை தெரிந்து கொள்வதற்கு ஒரு வழியுள்ளது. மிகவும் இலகுவான படிமுறைகளைக் கொண்ட வழிமுறை இதுவாகும். 


அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் Mail Track என்ற இந்த இணையத்தளம்.


  • முதலில் Mail Track எனும் இந்த நீட்சியை உங்கள் இணைய உலாவிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்க.
  •  அதன் பின் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள்.
  • இதன் போது Mail Track சேவையை உங்கள் கணக்கிற்கு செயற்படுத்த வேண்டுமா? என்றதொரு Pop Up Window தோன்றுவதனை அவதானிப்பீர்கள்.

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா..? என்பதை அறிந்து கொள்ள

  • பின் அதில் ACTIVATE MAILTRACK என்பதனை அழுத்துங்கள்.
  • அதன் பின்னர் SING IN WITH GOOGLE எனும் Window தோன்றும்  அதனையும் சுட்டுக.


நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா..? என்பதை அறிந்து கொள்ள

  • பிறகு புதியதொரு Window வில்  Mail Track சேவையினை உங்கள் Gmail கணக்கிற்கு செயற்படுத்துவதற்கான உங்கள் அனுமதியை கேட்கும் (கீழே படத்தில் உள்ளவாறு)

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா..? என்பதை அறிந்து கொள்ள

  • அதில் Accept என்பதனை அலுத்துக.

அவ்வளவுதான் Mail Track சேவை உங்கள் Gmail கணக்கிற்கு செயற்படுத்தப்பட்டு விட்டது.

இனி நீங்கள் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பும் போது அதற்கு சிறியதொரு Tick அடையாளம் இடப்படும். பின் அந்த மின்னஞ்சல் படிக்கப்பட்டால் அதற்கு இன்னுமொரு Tick அடையாளமும் இடப்படும்.

இருமுறை Tick செய்யப்பட்ட அந்த அடையாளத்துக்கு அருகில் Cursor ஐ நகர்த்துவதன் மூலம் அது எவ்வளவு நேரத்து முன் படிக்கப்பட்டது என்பதனை அறிந்து கொள்ளலாம்.


நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா..? என்பதை அறிந்து கொள்ள
  • மேலும் நீங்கள் புதியதொரு மின்னஞ்சலை உருவாக்கும் போது தோன்றும் Window வில்  இந்த Mail Track அடையாளத்தை சுட்டுவதன் மூலம் உங்கள் மின்னசல் படிக்கப்பட்டவுடன் அதனை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னஞ்சலை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டு விட்டதா..? என்பதை அறிந்து கொள்ள


நன்றி 

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்களின்  நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  

Post a Comment Blogger

  1. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  2. ஆஹா தம்பி மொகமட்.. இதை நான் ஏற்கனவே அறிஞ்சிருக்கிறேன் ஆனா எப்படி செயல்படுத்துவதெனத் தெரியாமல் இருந்தேன்.. இவ்ளோ சிம்பிளாக இருக்கே.. செய்து விடுகிறேன்.. இனி யாரும் என்னிடம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாட முடியாது:)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  3. Good, looks very simple, let mr try, thanks

    ReplyDelete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே

      Delete
  5. Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரே

      Delete
  6. வலைத்தள பக்க வடிவமைப்பு அருமை. வாழ்த்துகள். கணணி வார்த்தை புதுமையா இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, எனது தளத்தய் Subscribers செய்தால் புதிய்ய தகவல்களை பெற முடியும்.

      Delete
  7. இது பற்றி தெரியும் ஆனால் செய்ததில்லை. நாம் இப்படி டிராக் பண்ணுவது அவர்களுக்குத் தெரிய வருமா..

    ReplyDelete
    Replies
    1. இந்த முறையை அவகளும் செய்தால் தெரிய வரும்.
      நன்றி சகோ

      Delete

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top