CamStudio – உங்கள் கணிணி நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ய…
கணிணியில் Screenshot எடுப்பதற்கு பல மென்பொருள்கள் உண்டு. மேலும் கணினியில் உள்ள Print Screen வசதி மூலமும் Screenshot எடுக்கலாம்.ஆனால் இதன் மூலம் உங்கள் கணிணியில் உங்கள் நடவடிக்கைகளை வீடியோவாக மாற்ற இயலாது.புகைப்படம் மட்டுமே எடுக்க முடியும்.
நீங்கள் ஏதாவது உங்கள் நடவடிக்கைகளை உதாரணமாக நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவுவதை முழுமையாக ஒரு வீடியோவாக பதிவு செய்ய விரும்பினால் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.இதோடு உங்கள் குரலையும் அதாவது வீடியோவாக பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யலாம்.
இந்த மென்பொருளை நிறுவிய பின் அதில் உள்ள Record சிவப்பு பட்டனை அழுத்தினால் அதிலிருந்து உங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்ய ஆரம்பித்து விடும். உங்கள் தேவையான போது Stop பட்டனை அழுத்தி நிறுத்தி விட்டு வீடியோவாக Save செய்து கொள்ளலாம். நடவடிக்கைகளை பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதை வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளலாம். தேவையில்லையென்றால் வெறும் வீடியோ மட்டும் கூட பதிவு செய்து கொள்ளலாம்.
இதில் பல வசதிகள் உண்டு. நீங்கள் உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதி அல்லது முழு திரை வடிவில் கூட Record செய்யலாம்.
இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்,பயன்படுத்தி பாருங்கள்.இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
Post a Comment Blogger Facebook
இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.