1

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை இலவசமாக  கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.


இணையத்தினை ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட நோக்கங்களில் பயன்படுத்துகின்றனர். இதனை ஏராளமானோர் தவறான கண்கொண்டு பார்த்தாலும்  இணையமானது கற்றல் நடவடிக்கைகளுக்கும் சிறந்ததொருகளமாகவே அமைந்துள்ளது.

அந்தவகையில் வேகமாக தட்டச்சு செய்ய உங்களை பயிற்றுவிக்கும் முற்றிலும் இலவசமான ஒரு இணையதளம், மற்றும் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் பயனுள்ள தளங்கள் போன்று எமது முன்னைய பதிவுகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் இணைய தளங்கள் பலவற்றை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு உதவுகின்றது  trilingualdictionary.lk  எனும் இணையதளம்.

Trilingual dictionary For Learn Tamil,English.Sinhala Languages


  • இந்த தளத்தில் தமிழ் மொழியிலமைந்தஒரு சொல்லை சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் சிங்கள மொழியில் அமைந்த ஒரு சொல்லை ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கும், ஆங்கிலத்தில் அமைந்த ஒரு சொல்லை தமிழ், சிங்கள மொழிகளுக்கும் என வெவ்வேறாக மொழி பெயர்துக்கொள்ள முடிவதுடன் அந்தந்த மொழிகளை தட்டச்சு செய்து கொள்வதற்கென குறிப்பிட்ட தளத்திலேயே Keyboad உம் தரப்பட்டுள்ளது.


  • இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான சொற்களும், வசனங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் எமது கற்றல் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் பொருட்டு குறிப்பிட்ட சொற்களை அல்லது வசனங்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும் தரப்பட்டுள்ளது.

Trilingual dictionary For Learn Tamil,English.Sinhala Languages


ஆசிரியர்கள், மாணவர்கள் என எந்த ஒரு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய இந்த தளத்திற்கு நீங்களும் பிரவேசிக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.





Post a Comment Blogger

இவ்விடத்தில் உங்கள் கருத்துகளையும், பதிவில் உள்ள நிறை குறைகளையும் என்னிடத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

 
Top