tech tamil tips Windows-ல் இருக்கும் Sticky Notes எனும் நினைவூட்டும் மென்பொருள்
அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களை அல்லது சிறு குறிப்புக்களை எழுதி வைத்து அதனை அடிக்கடி பார்த்துக்கொள்ள உதவுகின்றது Sticky Notes எனும் Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள்.
- ஆனால் இது போன்ற ஒரு எளிமையான மென்பொருள் தமது Windows கணனியில் இருப்பதனை அதிகமானவர்கள் அறிந்ததே இல்லை.
- இதனை திறந்து கொள்ள Start Menu சென்று Search பகுதியில் Sticky Notes என தட்டச்சு செய்க.
- இனி தோன்றும் Sticky Notes எனும் மென்பொருளை சுட்டுக.
- பிறகு உங்களுக்கு தேவையான குறிப்புக்களை எழுதி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு இடைமுகம் தோன்றும்.
- பின் அதில் உங்களுக்கு தேவையான குறிப்புக்களை அல்லது அடிக்கடி ஞாபகத்தில் இருக்க வேண்டிய விடயங்களை பதிந்து வைத்துக்கொள்ளலாம்.
- இதில் நீங்க உருவாக்கும் எழுத்துக்களினது தோற்றத்தினை நீங்கள் விரும்பிய வகையில் அமைத்துக் கொள்ள பின்வரும் Keyboard Shortcut களை பயன்படுத்துங்கள்.
- தடித்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Bold text) =====> Ctrl+B
- சரிந்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Italic text) =====> Ctrl+I
- எழுத்துக்களுக்கு Underlined செய்ய =====> Ctrl+U
- எழுத்துக்களுக்கு குறுக்காக கோடிட (Strikethrough) =====> Ctrl+T
- எழுத்துக்களுக்கு Bullet செய்து கொள்ள =====> Ctrl+Shift+L (குறிப்பிட்ட விசைகளை மீண்டும் அடுதுவதன் மூலம் இலக்கங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்)
- எழுத்துக்களின் அளவுகளை பெரிதாக்கிக் கொள்ள ====> Ctrl+Shift+>
- எழுத்துக்களின் அளவுகளை சிறிதாக்கிக் கொள்ள =====> Ctrl+Shift+<
- மேலும் அதன் மேல் Right செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான நிறத்தை அதன் பின்புலத்துக்கு இட்டுக்கொள்ளலாம்.
- உங்கள் கணணியை நீங்கள் Shutdown செய்து விட்டு மீண்டும் துவக்கினாலும் அவைகள் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும்.
- இது Windows இல் இல்ல விடில் தரவிரக்க்கம் செய்ய இங்கே சுட்டவும்
thanks
ReplyDelete